உனக்குள் ஒரு ரகசியம் | குரு மித்ரேஷிவா | Hello Vikatan
Share:

Listens: 7

About

``தியானம் செய்வதன் மூலம் நீங்கள் எதை அடைந்தீர்கள்'' என்று துறவியிடம் ஒருவர் கேட்டார். ‘‘ஒன்றுமில்லை'' என்று சொல்லிச் சிரித்தார் துறவி. ‘‘பிறகு இதை நீங்கள் செய்வதன் அர்த்தம் என்ன?'' என்று அவர் மீண்டும் குழப்பத்துடன் கேட்டார். ‘‘தியானத்தின் மூலம் நான் எதையெல்லாம் இழந்தேன் என்று அறிந்துகொள். கோபம், மன அழுத்தம், துயரம், உடல் உபாதைகள், முதுமை குறித்த மனச்சுமை, மரணம் குறித்த அச்சம்... எல்லாவற்றையும் இழந்திருக்கிறேன். ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்'' என்றார் துறவி.


இப்படி ஒரு ஜென் கதை உண்டு. தங்கள் தொழிலை, பணியை, வியாபாரத்தை, தாங்கள் செய்யும் எதையும் ஒரு தியானம் போலக் கருதும் மனிதர்கள் மகிழ்ச்சியை அதிகம் பெறுகிறார்கள்.