History
பாரத பிரிவினைக்கு மஹாத்மா காந்தி தான் முக்கிய காரணம் என்ற எண்ணம் பரவலாக நிலவுகிறது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இரண்டு உலகப்போர் காலகட்டங்களிலும் உலகளவில் என்ன நடந்தது, அது இந்தியாவில் எப்படி பிரதிபலித்தது, ஆங்கிலேயர்களின் எதிர்கால ஆளுமை திட்டம் என்னவாக இருந்தது, அவர்களது திட்டத்திற்கு பாகிஸ்தான் அமைவது எவ்வளவு முக்கியம் வாய்ந்தது, பிரிவினை திட்டத்தை நிறைவேற்ற எவ்வாறு ஆங்கிலேயர்கள் காய்களை நகர்த்தினர், ஜின்னாவை தனக்கு சாதகமாக எப்படி பயன்படுத்தினர், முஸ்லீம் லீக் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே என்ன நிகழ்ந்தது, தேசியவாதியான பட்டேல் எப்படி பிரிவினையை ஏற்றார், என்பது உட்பட பல விஷயங்களை அலசும் பதிவு இது.