த.வெ.க. ஆட்சியில் முதல்- அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது: கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி

Share:

Maalaimalar Tamil

த.வெ.க. ஆட்சியில் முதல்- அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது: கனிமொழி எம்.பி. பரபரப்பு பேட்டி

News



விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டியை சேர்ந்தவர்கள் வடிவேல்- பவானி தம்பதியினர். இவர்களது 2-வது மகள் ஹேமலதா. கடந்த மாதம் 11-ந்தேதி தனது பிறந்தநாளை பெற்றோர், உறவினர்களுடன் கொண்டாடி விட்டு, பெற்றோருடன் தூங்கிய சிறுமி மறுநாள் 12-ந்தேதி அதிகாலை மாயமானார். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடிவருகின்றனர். சிறுமி மாயமாகி 34 நாட்கள் ஆகி விட்ட நிலையில், எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் தி.மு.க துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி இன்று ஆலம்பூண்டி கிராமத்தில் உள்ள சிறுமியின் வீட்டிற்கு நேரடியாக வருகை தந்தார்.