Arts
Art in Queer Literature (Panel in Tamil) Panelists: Maari, Vai. Moderator: Senthil பால்புது இலக்கியத்தில் ஓவியங்கள் - பேச்சாளர்கள்: மாரி, வை. வழிநடத்துநர்: செந்தில். For More Information: QueerLitFest.com & QueerChennaiChronicles.com Art is a perception, art is something perceived rather than spoken words of representation. While it is easy to quote “picture speaks a thousands words” when we talk about art, does all the art-illustration represent each one of us who consume it? Does the current art form in our literatures represent the diverse spectrum of humans or does it represent what we see as the ‘norm’? Art is also a portrayal and projection that convey something more, paving way to perceive people, situation, politics and so on. Art from the subaltern not just paves way or perceptions but also brings empowerment within the community and widely projects the idea which spoken words had missed to do, art by itself promotes a philosophy and politics. கலை என்பது ஒரு கருத்தியல். வார்த்தைகளால் விவரிக்க முடியாத புலன்களால் உணரமுடிகிற ஒரு உணர்வு. ஒரு கலைப்படைப்பு ஆயிரம் வார்த்தைகளைப் பேசும் என்று நாம் எளிதாகச்சொன்னாலும் அக்கலையை நுகரும் நம் அனைவரையும் அக்கலை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா? இலக்கிய வட்டத்துக்குள் தற்போது இயங்கும் கலைவடிவங்கள் அனைத்து தரப்புமக்களுக்கானதாகவும் இருக்கிறதா? அல்லது இயல்பு எனும் விதிக்குள் அடங்கி விடுகிறதா? கலை என்பது மக்கள், அவர்களது நிலை, அரசியல் போன்றவற்றை எளிதாக புரியவைக்கும் பலசித்தரிப்புகள் மற்றும் கருத்துக்களின் வெளிப்பாடு. அதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்தின் சிந்தனைகளை மேம்படுத்துவதோடு வார்த்தைகளால் விளக்க முடியாத கருத்துக்களையும் விளக்குகிறது. கலை தன்னளவியேலே தத்துவங்களையும் அரசியலையும் பரப்புகிறது.