Business
தமிழில் ஒரு நல்ல பழமொழி சொல்வார்கள் `தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.' பழக்கம் என்பது பெரும்பாலும் மாறவே மாறாது. அந்தப் பழக்கத்தையேதான் திரும்பத் திரும்ப செய்து கொண்டிருப்போம். அப்படியான ஒரு பழக்கம்தான் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்வது. முதலீடு செய்ய திட்டமிட்டதும், சம்பளதாரர்கள் பலரும் முதல் முதலீடாக வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில்தான் பணத்தை முதலீடு செய்வார்கள். ஃபிக்ஸட் டெபாசிட் ரொம்ப பாதுகாப்பானது, நிலையான வருமானம் தரக்கூடியது, எளிதில் பணமாக்கக்கூடியது எனப் பல வசதியான அம்சங்கள் இருப்பதால் ஃபிக்ஸட் டெபாசிட் அதிக வரவேற்பு கொண்ட முதலீடாகவே இருக்கிறது. இதைவிட கூடுதலாக லாபம் தரும் முதலீட்டு திட்டங்கள் என்னென்ன? இன்றைய எபிசோடில் பார்ப்போம்.
-The Salary Account Podcast