பணவீக்கம் உங்களை பாதிக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும்? - 26

Share:

Listens: 37

The Salary Account | Hello Vikatan

Business


 பணவீக்க விகிதம் (Inflation) என்கிற விலைவாசி உயர்வை நம் முதலீட்டை விழுங்கும் பூதம் எனலாம். இது பணத்தின் மதிப்பை மிகவும் குறைத்து விடுகிறது. 25 ஆண்டுகளுக்குமுன் நீங்கள் ₹1 கோடி வைத்திருந்தால், அதை வைத்து சென்னை புறநகரில் கிட்டத்தட்ட 50 சென்ட் வீட்டு மனைக்கான இடம் வாங்கியிருக்க முடியும். இன்றைக்கு 2023–ம் ஆண்டில் ₹1 கோடியை கொண்டு 5 - 8 சென்ட் இடம்கூட வாங்க முடியாது. அந்த அளவுக்கு நிலத்தின் விலை உயர்ந்திருக்கிறது. நிலம் மட்டுமல்ல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது.


அதே நேரத்தில், அவர் அந்த ₹1 கோடியை ஆண்டுக்கு 10% வருமானம் தரும் நிதித் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், அது இப்போது ₹10.83 கோடியாக அதிகரித்திருக்கும். அந்தப் பணத்தைக் கொண்டு இன்று அவரால் தாராளமாக 50 சென்ட் இடம் வாங்க முடியும். இதிலிருந்து நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம், பணவீக்க விகித பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில், பணத்தை நல்ல லாபம் தரும் முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்வது மட்டும்தான் ஒரே வழி. இதுகுறித்துதான் இந்த வார The Salary Account எபிசோடில் பார்க்கப்போகிறோம். 

-The Salary Account