மோடிக்கும் ஆளுநருக்கும் செக் வைத்த ஸ்டாலின்! | Solratha Sollitom-07/09/2023

Share:

Solratha sollitom| Hello Vikatan

Society & Culture


* சனாதன எதிர்ப்பு குறித்து ஸ்டாலின் விரிவான அறிக்கை

* உதயநிதியை அறைந்தால் 10 லட்சம் என்று ஆந்திராவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பான ஜன ஜாகரணா சமிதி தெரிவித்துள்ளது.

* இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ஒரு வீடியோ வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், 'இந்திய ஒற்றுமை யாத்திரையின் அன்பை நோக்கிய நடைபயணம் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக மாறியுள்ளது. இந்த பயணம் தொடரும்.. வெறுப்பு மறையும் வரை, இந்தியா ஒன்று சேரும் வரை. இது என்னுடைய வாக்குறுதி' என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

* காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று கூறும்போது, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யாது. அப்படி செய்யும்போது, பா.ஜ.க. ஒரு பக்க முடிவை எடுத்து விடும் என கூறியுள்ளார். முக்கிய விவகாரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதனை நாங்கள் முன்வைப்போம் என்று பேசியுள்ளார். 

* "பா.ஜ.க -அ.தி.மு.க உறவு கணவன் - மனைவி உறவு போன்றது. அதைப்பற்றி தினமும் விளக்க வேண்டியதில்லை" - ஹெச்.ராஜா

* மூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு முறைக்கு ஆர்.எஸ்.எஸ்.இன் ஆதரவு தொடரும் என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.


-Solratha Sollitom