மீண்டும் வெடிக்கும் அ.தி.மு.க - பா.ஜ.க மோதல்! | Solratha sollitom-16/03/2023

Share:

Solratha sollitom| Hello Vikatan

Society & Culture


* செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது;- "தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மொழிப்பாடத் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுத வராதது ஏன் என்பது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

* கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கிறிஸ்துவ மத போதகர்

* அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை தீ வைத்து எரித்த சம்பவத்தில் பா.ஜ.க நிர்வாகி நீக்கி மீண்டும் சேர்ப்பு


* "குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது; அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்”- ஜெயக்குமார் 

* ராகுல்காந்தி, லண்டன் கருத்தரங்கில் நான் இந்தியாவுக்கு எதிராக எதையும் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விளக்கம் அளிக்க என்னை அனுமதித்தால் நான் விளக்கம் அளிப்பேன். நாடாளுமன்றத்தில் என்னை பேச அனுமதித்தால் நான் என்ன நினைக்கிறேனோ அதை பேசுவேன்' என்றார்.

* கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான (OBC) இடஒதுக்கீட்டில் உள்ள கிரீமிலேயர் எனும் வருமான உச்சவரம்பை நீக்கும் திட்டம் எதுவும் இல்லை - நாடாளுமன்றத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பதில் 

* 2022 ஜூலையில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், தன்னை கட்சியிலிருந்து நீக்கம் செய்தது ஆகியவற்றை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கும் மனோஜ் பாண்டியன், தற்போது அதிமுகவின் உறுப்பினரே அல்ல. - எடப்பாடி பதில்மனு தாக்கல்



Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed