News
பழைய திமுகவை மீண்டும் பார்க்க வேண்டி இருக்கும்; பிரதமர் மோடிக்கான கடைசி எச்சரிக்கை
தொகுதி மறு வரையறை விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தொகுதி மறுவரையறை குறித்த அரசியல் சட்டத்திருத்தத்தை நடப்பு தொடரில் திணிக்கப் போகிறார்கள். தமிழகத்தை பாதிப்பது போலோ, வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரிவழங்குவது போல் ஏதாவது நடந்தால் தமிழ்நாட்டில் இருக்கும் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும், 50-60களில் பார்த்த பழைய திமுகவை இந்தியா திரும்ப பார்க்க வேண்டி இருக்கும் என்றார்.

