Society & Culture
அனைவரும் மகிழ்ச்சியாக வாழத்தான் பூமிக்கு வந்திருக்கிறோம். ஆனால், வாழ்கிறோமா என்றால் இல்லை. ‘இருப்பதற்கு என்றுதான் வருகிறோம். இல்லாமல் போகிறோம்' என்றார் கவிஞர் நகுலன். அதையே இப்படிச் சொல்கிறேன். ‘வாழ்வதற்கு என்றுதான் வருகிறோம். வாழாமல் போகிறோம்.' வாழ்க்கை ஆனந்தமயமானது. வாழத்தெரிந்தவர்கள் எப்போதும் அதை ஆனந்தமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.