Every day - படி

Share:

Spread love

Society & Culture


பெண்ணே நீ

படி;

படித்த பெண்ணைத்தான்

பாராட்டும் படி;நீ

படிக்கவேண்டும்-அது

பாராட்டும்படி.

நிதப்படி -குறித்த

நேரப்படி

ஏறு

எழுத்தறிபிக்கும்

பாடசாலையின்-வாயிற்

படி;

பாரதியும் பாரதிதாசனிம்

படித்துப்படித்து

பன்னியபடி.

ஆழப்படி

அகலப்படி;உனக்கு

அனைத்துப் பாடங்களும்

ஆகவேண்டும் அத்துப்படி

படித்தால் முன்னேற்றம் வரும் -

படிப்படி;அடி

பெண்ணே பெண்ணுக்கு

முக்கியம் படிப்படி.

-வாலிதாசன்.