News
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் வெளியான திரைப்படம் "ஜெயிலர்." இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக படக்குழு சமீபத்தில் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்தனர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பாலைய்யா இணைந்துள்ளதாகவும், அவர் ஒரு கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.