News
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வரும் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.