TV & Film
முதலமைச்சர் விஜயை சந்திக்கும் திரைப்பிரபலங்கள்
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். முதல்வராக விஜய் பொறுப்பேற்றதை இந்தியா மட்டுமின்றி, வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களும் பாராட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆக்ஷன் கிங் அர்ஜூன் முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார். அவரை தொடர்ந்து இசையமைப்பாளர் தமனும் முதல்வர் விஜயைச் சந்தித்துள்ளார். மாஸ்டர், லியோ படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜும் முதல்வர் விஜயை சந்தித்துப் பேசினார். இதுதொடர்பான படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

