News
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த உயரிய விருது நாளை மறுதினம் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விருது வென்றது குறித்து கூறிய நடிகர் மோகன்லால்," 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது. எனவே, இந்த விருதை மலையாள திரைத்துறையுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்றார்.