News
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார். கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.