News
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜனநாயகன் படக்குழு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்த நிலையில் உச்சநீதிமன்றத்தை தயாரிப்பு நிறுவனம் நாடியுள்ளது.இந்நிலையில், தணிக்கை வாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

