News
இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக மீசைய முறுக்கு 2 படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அனைத்தையும் ஹிப்ஹாப் தமிழா மேற்கொள்கிறார். சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்த படத்தையும் தயாரிக்க உள்ளனர்.