அமித்ஷா மீது பாயும் உதயநிதி! | Solratha Sollitom - 14/09/2023

Share:

Listens: 35

Solratha sollitom| Hello Vikatan

Society & Culture


* RBVS மணியன் கைது. 

* பெண்களும் இனி அர்ச்சகர்கள்

* நாடு முழுவதும் உள்ள அனைத்து 'சனாதனிகளும்', நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். - மோடி

* இந்தூரில் உள்ள கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்தியாவில் சிலர் தொடர்ந்து சனாதனத்தை அவமதித்து வருகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் தேசிய மதமாக உள்ள சனாதன தர்மத்தின் நிலைத்தன்மையை யாரும் கேள்விகேட்க முடியாது.

* பொன்முடி வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. .

* அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்துதமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?. நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

* 2வது முறையாக சீமானுக்கு சம்மன்...

* டில்லி சென்றார் பழனிசாமி...

* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் என்னிடம் ரூ.2,000 கோடி பேரம் பேசி வருகின்றனர். என்ன ஆனாலும் நான் அதிகாரிகளிடம் உண்மையைச் சொல்லுவேன்” - தனபால்.

* நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை அரசு வெளியிட்டது.


-Solratha Sollitom