ஐந்துமுனைப் போட்டி: இடைத்தேர்தலை தனித்து களம் காணும் இடதுசாரிகள் - தாராபுரத்தில் சிபிஐ போட்டி!
News
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை தொடர்ந்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6-ல் இடைத்தேர்தல் நடக்கிறது.தவெக, திமுக, அதிமுக, நாதக களத்தில் உள்ள நிலையில், தவெக கூட்டணியில் இடம்பெறாத இடதுசாரிகள் யாருக்கு ஆதரவு என்ற கேள்வி எழுந்தது.இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்., "இடைத்தேர்தல் தொடர்பாக இரண்டு நாட்கள் சிபிஐ செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தற்போது நிலவும் அரசியல் சூழலில் எந்தக் கூட்டணியிலும் இடம்பெறுவதில்லை என்ற முடிவை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம்.

